
நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மழை வெள்ளம், அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் பெரியதிருக்கோணம் பகுதியில் உள்ள ஏரியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

