
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2, குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் முறைகேடு செய்ததாக இதுவரை 191 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மோசடி நடந்துள்ளதாகவும் இம்மோசடி குறித்து விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி சரியான முறையில் விசாரிக்கவில்லை எனவும் புகார் எழுந்தது. உரிய நடவடிக்கை கோரி மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமதுரஷ்வி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

