
பேரிடர் மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு என, சமச்சீரான இழப்பீடு வழங்க விதிகளை வகுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலையில் சென்றபோது மரம் விழுந்து இரு வேறு விபத்துகளில் பலியான முதியவர் மற்றும் சிறுவனின் குடும்பத்தினர் தரப்பில் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

