
உலக வங்கியுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் சுகாதாரத் திட்டப் பணிகள் நடவடிக்கைக்கான திட்ட இடைக்கால மறு ஆய்வுக் கூட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று நடைபெற்றது.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு திட்டப் பணிகளைப் படிப்படியாகச் செயல்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் பல்வேறு சுகாதாரப் பணிகளுக்காகத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ரூ.2,757 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டங்களை உலக வங்கியுடன் இணைந்து செயல்படுத்துவற்கான திட்ட இடைக்கால மறு ஆய்வுக் கூட்டம் இன்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

