
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
இதுகுறித்துத் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், நாளை மறுநாள் (21-11-2021) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

