
தமிழக அரசின் தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால், திருவண்ணாமலையில் 20 மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் இன்று (19-ம் தேதி) கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் என்பது உலக பிரசித்தி பெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கி.மீ. தொலைவு உள்ள கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசிக்கின்றனர். இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவல் எதிரொலியாக ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டதால், 2020-ம் ஆண்டு பங்குனி மாத பவுர்ணமிக்கு முதன்முறையாகத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவு தொடர்ந்து நீடித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

