
அதிமுகவைச் சேர்ந்த மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரைக்குச் சொந்தமான பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் நிலங்கள் தொடர்பாக சர்வே மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த கோனம்பேடு கிராம பொதுநலச் சங்கத்தின் தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், தங்கள் கிராமப் பகுதியில் தற்போது நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்,
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

