
மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பொறுப்பு வகிக்கும் தமிழிசை, தெலங்கானா ஆளுநராக உள்ளார். தெலங்கானா சென்று அங்கு நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு தற்போது டெல்லியில் தெலங்கானா பவனில் உள்ளார். அப்போது மரியாதை நிமித்தமாக மத்திய மீன்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகனை ஆளுநர் தமிழிசை சந்தித்துள்ளார். இணையமைச்சர் முருகனுக்கு ஆளுநர் தமிழிசை வாழ்த்து தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

