
தூத்துக்குடியில் ஆழ்கடல் வெளித்துறைமுகம் திட்டப் பணிகள் தொடங்கி விட்டனவா என, மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்..
திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நேற்று (ஆக. 05) மக்களவையில், "தற்போது தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருக்கும் கப்பல் மிதவை ஆழம் குறைவாக உள்ளதால், மிகப்பெரிய கப்பல்கள் வந்து செல்வதில் சிக்கல் இருக்கிறது. எனவே, இந்த பிரச்சினையைக் கருத்தில் கொண்டு வெளித்துறைமுகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதா? அப்படியானால், திட்டப் பணிகள் தொடங்கிவிட்டனவா? இதுவரை வெளித்துறைமுகத் திட்டப் பணிகளுக்கு அரசு செலவிட்ட தொகை எவ்வளவு?" என, மத்திய கப்பல் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவாலிடம் கேள்வி எழுப்பினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

