
பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழகத்திலுள்ள 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்றனர். ஆனால், புதிய மாவட்டங்கள் உதயமானதால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தொகுதி வரையறைப் பணிகள் காரணமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்தத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என அண்மையில் உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருப்பதால், தேர்தலை எதிர்கொள்ள திமுக மற்றும் அதிமுக தலைமை ஆயத்தமானாலும், ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள திமுக, அதிமுக நிர்வாகிகள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

