
சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் நேற்று இரவு திருச்சி வந்த மற்றொரு பயணிக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவிவிடாமல் தடுக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குக் கட்டாய கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்படுபவர்கள் மட்டுமே சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அந்தவகையில், திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

