
தமிழகத்தில் எந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட இன்னும் சில செழிப்பான வேளாண் பகுதிகளிலும் செயல்படுத்தப் போவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதிலிருந்தே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதற்கான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

