
புதுச்சேரி மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்தைத் தாண்டியுள்ளது. புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (டிச.11) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 1,974 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 5 பேர், காரைக்காலில் 6 பேர், மாஹேவில் 11 பேர் என மொத்தம் 22 பேருக்கு (1.11 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

