
எலும்பு முறிவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட ஆறு மணி நேரத்துக்குள் 4,190 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்தார்.
சாலை விபத்து மற்றும் பிற விபத்துகளால் எலும்பு முறிவு ஏற்பட்டு, மாதந்தோறும் சுமார் 250 முதல் 300 பேர் கோவை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு எலும்பு முறிவு ஏற்பட்டு, அனுமதிக்கப்பட்ட ஆறு மணி நேரத்துக்குள் மருத்துவமனையின் முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவனம் மூலம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

