
மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் கரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியம் என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
'அறம்' அறக்கட்டளையின் தலைவரான உமர் பாருக் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கரோனாவை எதிர்கொள்வதற்கான தடுப்பூசியைப் போட அனைத்துத் தரப்பிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலை மேற்கோள் காட்டி, கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த கட்டுப்பாடுகள் நீட்டிப்பு உத்தரவைப் பின்பற்றி அரசுத் துறைகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கல்வி நிறுவனங்களில் உள்ள பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டுமென வற்புறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

