
அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் விடுபட்ட கரும்பை இணைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, நெய், வெல்லம் உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பைத் தமிழக அரசு அறிவித்தது. இதில் கரும்பு இடம்பெறவில்லை என்றும், உடனடியாகப் பொங்கல் தொகுப்பில் விடுபட்ட கரும்பை இணைக்க வேண்டும் என்றும் கடலூர் விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

