
திருப்பூரைச் சேர்ந்த ஒருவருக்குப் பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பூர், வேலம்பாளையம், சோளிபாளையம் கேஆர்சி கீர்த்தனா நகர் பகுதியைச் சேர்ந்த 44 வயது ஆணுக்கு, கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல், தொண்டை வலி மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்டவை இருந்தன. இந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் தொடர்பாகப் பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்குப் பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

