
கடலூர் மாவட்டம் புவனகிரி பரங்கிப்பேட்டை பகுதிகளில் வெள்ள சேத பகுதிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்
கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோர் இன்று புவனகிரி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சித்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு புவனகிரி தனியார் திருமண மண்டபத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி , பாய், வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர் .
தொடர்ந்து பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பூவாலை கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து அவர்கள் சிதம்பரம் புறவழிச்சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

