
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில், ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பையும் தாண்டி 40 ஆண்டுகாலம் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
விருத்தாசலத்தில் பழமை வாய்ந்த தலமாக விளங்கும் விருத்தகிரீஸ்வரர் கோயில் 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் கோயிலின் கட்டுமானங்கள் மட்டும் 9 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. 8 ஏக்கரில் கோயில் திறந்தவெளி பிரகாரமாக உள்ளது. 5 ராஜ கோபுரங்களை உள்ளடக்கிய சிறப்பு வாய்ந்த இக்கோயிலைச் சுற்றி சுமார் 100 கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலம் கோயிலுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

