
அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஐசிஏஆர் தேர்வில் திண்டுக்கல் மாணவி அ.ஓவியா தமிழகத்தில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
‘இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்ச்சர் ரிசர்ச்’ அமைப்பு ஆண்டுதோறும் பி.வி.எஸ்சி. (கால்நடை டாக்டர்) படிப்பு முடித்தவர்கள் மேற்படிப்பில் சேர எம்.வி.எஸ்.சி. படிப்புக்காக கால்நடைத் துறைக்கான அகில இந்தியத் தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வு செப்டம்பர் 17-ம் தேதி அகில இந்திய அளவில் நடைபெற்றது. திருநெல்வேலியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பி.வி.எஸ்.சி. முடித்த திண்டுக்கல் மாணவி அ.ஓவியா ஐசிஏஆர் தேர்வை எழுதினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

