
நூல் விலை உயர்வுக்கு எதிராகத் திருப்பூரில் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமாகத் திருப்பூரிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாகப் பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடுமையாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூ.120 முதல் ரூ.150 வரை விலை உயர்த்தப்பட்டு ரூ.300 முதல் ரூ.350 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

