
முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரண்டரான கடலூர் எம்.பி. ரமேஷுக்கு நவம்பர் 9-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பம் கிராமத்தில் கடலூர் எம்.பி., டிவிஆர்எஸ் ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. அங்கு பணியில் இருந்த தொழிலாளர் கோவிந்தராஜ் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

