
அதிமுக அரசுக் கொண்டு வந்த எந்த திட்டத்தையும் திமுக அரசு அனுமதிக்கவில்லை என்று கூறி சட்டப் பேரவையில் இருந்து அதிமுக இன்று வெளிநடப்பு செய்தது.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு துறைககளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று சட்டப்பேரவையில், கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் முடக்கப்பட்டிருப்பதாக புகார் கூறியதுடன், அதுகுறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அதிமுக எம்எல்ஏக்கள் அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெளிநடப்பு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

