
மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து திட்டம் வகுக்கவும், தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மாநில மனநலக் கொள்கையை அமல்படுத்தக் கோரியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்கக் கோரியும் 'சீர்' என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

