
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி செல்லும் தென்மண்டல சிஆர்பிஎஃப் வீரர்கள் இன்று காலை விருதுநகர் வந்தடைந்தனர். அவர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகர் வரவேற்பு அளித்தார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய சிஆர்பிஎஃப் வீரர்களின் சைக்கிள் பேரணியைத் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 'ஆசாதி கா அம்ருத் மகா உத்ஸவ்' என்ற தலைப்பில், மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் 20 பேர் சிஆர்பிஎஃப் உதவி ஆணையர் பிரதீப் தலைமையில் டெல்லி ராஜ்பவன் வரை சுமார் 2,850 கி.மீ. தொலைவிற்கு சைக்கிள் பேரணி மேற்கொள்கிறார்கள். இப்பேரணியானது நமது நாட்டின் சகோதரத்துவம் , சமூக நீதி, மதச்சார்பின்மை போன்ற கோட்பாடுகளைப் பேணிக் காக்க மேற்கொள்ளப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

