
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, மகள் செந்தாமரை ஆகியோர் இன்று (23-ம் தேதி) சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகத்தில் அதீத நம்பிக்கை கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக சைவ மற்றும் வைணவத் தலங்களுக்குத் தொடர்ந்து சென்று, தமிழக முதல்வராகத் தனது கணவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்க வேண்டும் என வேண்டிக்கொண்டார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் பதவியேற்றுக் கொண்டார். தனது வேண்டுதல் நிறைவேறியதால், சைவ மற்றும் வைணவத் தலங்களுக்குச் சென்று துர்கா ஸ்டாலின் நேர்த்திக் கடன் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

