
புதுச்சேரியில் 120 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதித்த 4 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஆக.4) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,868 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-85, காரைக்கால்-15, ஏனாம் 2, மாஹே-18 என 120 (2.04 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

