
திமுகவின் 100 நாள் ஆட்சி என்பது இனிப்பு, கசப்பு, காரம் கலந்ததாக உள்ளது என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளையொட்டி, நெல்லை மாவட்டத்திலுள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய மீன்வளம், தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று (ஆக. 20) விமானம் மூலம் தூத்துக்குடி மாவட்டம் வந்தனர். தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

