
திருமணம் செய்துகொள்வதாகக் கூறிச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த சிக்கதாசம்பாளையம், இடையளர்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (20). இவரும் 17 வயதுச் சிறுமி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், வீட்டில் இருந்து கடைக்குச் சென்றுவருவதாகக் கூறிச் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது தந்தை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில், மகளைக் காணவில்லை என 2019, மே 7-ம் தேதி புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

