
மூன்று மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் திரையரங்குகள் இன்று திறக்கப்பட்டன. கேன்டீனில் ரசிகர்களை கவர ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற இலவச சலுகைகள் சில திரையரங்குகளில் தரப்பட்டன.
கரோனா ஊரடங்கினால் கடந்தாண்டு முதல் அலையின்போது மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தளர்வுகளினால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி 200 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. அதையடுத்து இரண்டாம் கட்ட அலையால் கடந்த ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. கிட்டத்தட்ட நூறு நாட்களுக்கு பிறகு புதுச்சேரியில் கரோனா தொற்று குறைவால் திரையரங்குகளை திறக்கலாம் என்று அரசு தளர்வை ஆகஸ்ட் முதல் தேதி அறிவித்தது. அதன்படி புதுச்சேரியில் திறக்கலாம் என்றாலும் எத்திரையரங்கும் திறக்கப்படவில்லை. திரையரங்கை தூய்மைப்படுத்தி பணிக்கு பணியாளர்களை வரவழைத்து, ஒவ்வொரு இருக்கைக்கும் இடையே யாரும் அமராமல் ஸ்டிக்கர் ஒட்டி இன்று திரையரங்குகள் திறக்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

