
புதுச்சேரியில் புதிதாக 126 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாநிலத்தின் பாதிப்பு சதவீதம் 2.08 ஆகக் குறைந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூலை 9) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 6,048 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 103, காரைக்காலில் 6, மாஹேவில் 17 பேர் என மொத்தம் 126 (2.08 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

