
பத்திரப் பதிவுத்துறையில் நடக்கும் ஊழலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு பணியாற்றிய சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணன், தூத்துக்குடிக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

