
கரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரண உதவிகளைப் பெறும் வகையில், உரிய முறையில் இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களுக்கு, கரோனாவால் உயிரிழந்தார் எனச் சான்றிதழ் வழங்கப்படாததால், அவர்களின் குடும்பத்தினரால் உரிய நிவாரண உதவிகளைப் பெற இயலவில்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

