நியூயார்க்: கடந்த 2023-ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் Humane நிறுவனத்தின் AI Pin என்ற சாதனத்தின் அறிமுகம் ஸ்மார்ட் கேட்ஜெட் ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்தது. இத்தகைய சூழலில் Rabbit எனும் அமெரிக்க ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தயாரிப்பான ‘R1’ எனும் சாதனம் தற்போது அதீத கவனம் பெற்றுள்ளது. இதுவரை தலா 10,000 வீதம் 5 பேட்ச் ‘ஆர்1’ சாதனம் விற்பனை ஆகியுள்ளது. தற்போது ஆறாவது பேட்ச் விற்பனை தொடங்கி உள்ளது.
சதா சர்வ காலமும் கூவும் மொபைல் போனின் நச்சரிப்பை அணைக்க விரும்பும் மக்கள் தான் இன்று அதிகம். அதற்கு மாற்றாக அறிமுகமாகி உள்ள சாதனம் என்று சொல்லி தான் ‘ஆர்1’ பிராண்ட் செய்யப்படுகிறது. பார்க்க மொபைல் போனை போலவே இந்த சாதனம் உள்ளது. என்ன வழக்கமாக மொபைல் போன்களின் திரை வழியே அதனை பயன்படுத்துவோம். ஆனால், ஆர்1-ல் பெரும்பாலான பணிகள் வாய்ஸ் கமெண்ட் மூலம் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கெனவே பிரத்யேக (Squishy) பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் திரையின் அளவு மிகவும் சிறியது. இதுவும் நமது பாக்கெட்களில் கச்சிதமாக அடங்கும் கருவி தான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/j5THioJ