செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த பார்வை ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். கல்லூரி பயிலும் மாணவர்கள், ஐடி துறையில் பணியாற்றும் நபர்கள் அதனை தங்களது போட்டியாளர்களாக பார்க்கலாம். அதுவே டெக் வல்லுநர்கள், மனித வாழ்வினை மேலும் ஸ்மார்ட் ஆக்கும் கருவியாக அதனைப் பார்க்கலாம். இத்தகையச் சூழலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஏஐ தொழில்நுட்பத்தை எப்படி பார்க்கிறார் என்பதை பார்க்கலாம்.
ஏனெனில், 20-ம் நூற்றாண்டில் கணினி சார்ந்த டிஜிட்டல் புரட்சிக்கு வித்திட்டவர்களில் பில் கேட்ஸும் ஒருவர். உலகம் முழுவதும் பரவலாக அறியப்படுகின்ற நபர். முக்கியமாக அவரது நிறுவனத்தின் விண்டோஸ் தான் உலக மக்களின் பார்வையை விரிவு செய்ய உதவி வருகிறது. 2022-ல் ஜெனரேட்டிவ் ஏஐ குறித்த விதையை தூவிய நிறுவனங்களில் மைக்ரோசாஃப்ட்டின் பணி கவனிக்கத்தக்கது. இப்படியாக பல காரணங்களை சொல்லலாம். இந்நிலையில், ஏஐ குறித்து தனது வலைப்பதிவில் அவர் பகிர்ந்துள்ள தகவல்கள் மிகவும் விரிவானது. இனி பில் கேட்ஸ் தொடர்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BTRCysP