சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ பாப் 6 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தற்போது இந்தியாவின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் பண்டிகை கால சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த போனும் அந்த சலுகையில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006 வாக்கில் நிறுவப்பட்டது. 2017 வாக்கில் இந்திய சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள கூடத்தில் போன்கள் அசெம்பிள் செய்யப்படுகின்றன. இந்த சூழலில் தான் என்ட்ரி லெவல் பிரிவில் பாப் 6 புரோ ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/v4PCfH5