
சென்னை: டிசம்பர் 17-ல் வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதன் காரணமாக சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாகத் தமிழகத்தில் இன்று முதல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோரத் தென் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி டிச.17ல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

