
கடலூர் மாவட்டத்தில் இழுவலையைத் தடை செய்யக் கோரி படகுகளில் கருப்புக் கொடியுடன் சிறுதொழில் செய்யும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக கடந்த ஆறு மாத காலத்திற்கும் மேலாக சுருக்குவலை பயன்படுத்தும் மீனவர்கள் சிறிய படகுகள் மூலம் சிறுதொழில் செய்யத் தொடங்கினர். இந்த நிலையில் இழுவலை பயன்படுத்தும் மீனவர்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறுவதால் தங்களது சிறுதொழில் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினர். இழுவலை பயன்படுத்தும் மீனவர்களின் வலைகள் கண் அளவு 40 மில்லி மீட்டருக்குக் குறைவாக இருக்கக் கூடாது, 240 குதிரைத் திறன் குறைவான இன்ஜின்களை மட்டும் பயன்படுத்த வேண்டும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் இருந்தும் அவற்றை மீறி மீன் பிடிப்பதால் தங்களது சிறுதொழில் பாதிக்கப்படுவதாகக் கூறிப் பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

