
உலகம் முழுவதும் பொருந்தொற்றுக்கான தனிப்பட்ட சட்ட விதிமுறைகள் இருக்கிறது. கொள்ளை நோய்க்கு எதிராக பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க கட்டாயப்படுத்தும் என்ற நிலை இருக்கிறது. அதனடிப்படையில் பொது மக்களின் நலனுக்காகதான் தடுப்பூசி புதுச்சேரியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரி, வில்லியனூரை அடுத்த ஒதியம்பட்டு பகுதியில் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்களுக்கு புதுச்சேரி செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக வெள்ள-நிவாரணப் பொருட்களை துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று வழங்கினார். சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு, புதுச்சேரி செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர். நரிக்குறவர் இன மக்களின் வீடுகளையும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளையும் துணைநிலை ஆளுநர் பார்வையிட்டார். அந்தப் பகுதியில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அங்கிருந்த குழந்தைகளுக்கு பாடபுத்தகங்கள், நோட்டுகள் மற்றும் எழுது பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார். குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

