திருப்பூர்: தமிழக அரசின் பயிர்க் கடன் தள்ளுபடிக்கான தேதியை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கக் கோரி விவசாயிகள் இன்று திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தின் ஈடுபட்டனர். திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக விசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.
இதில் விவசாயிகள் பேசியது: "கடந்த ஜன.14-ம் தேதி அப்போதைய எதிர்கட்சித் தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருவள்ளூவர் மாவட்டம் நத்தம் கிராமத்தில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்று, ''திமுக ஆட்சி அமைந்தால் அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்'' எனத் தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், இந்த அறிவிப்பால் கடன் சுமை வெகுவாக குறையும் என விவசாயிகள் கருதினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்