
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள ஆரோவில் பன்னாட்டு நகரத்தில் சர்ச்சைக்குரிய கிரவுன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அங்குள்ள குடியிருப்பு வாசிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இரவோடு இரவாக போலீஸ் பாதுகாப்புடன் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள ஆரோவில் பன்னாட்டு நகரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆரோவில் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வளர்க்கப்பட்ட நிலையில், அங்கு கிரவுன் எனப்படும் திட்டத்திற்கான சாலை அமைப்பதற்காக அங்குள்ள மரங்களை வெட்டும் பணியை பன்னாட்டு நகர வளர்ச்சிக்குழு மேற்கொண்டிருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

