
7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் தமிழக அரசு மீண்டும் வலியுறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது தமிழக ஆளு நர் தான்... இந்தியக் குடியரசுத் தலைவர் அல்ல என்பதை பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துகள் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளன. இந்த உண்மை ஆளுனர் மாளிகைக்கும் நன்றாகத் தெரியும் என்ற போதிலும் முடிவெடுப்பதில் காலதாமதம் செய்வது நியாயமல்ல.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

