
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளர், நா.கனகராஜின் குடும்பத்தாருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த கனகராஜின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் கனகராஜ் (57). இவர் இன்று (நவ.22) காலை 9.30 மணியளவில் கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

