
புதுச்சேரியில் கடும் மழைப் பொழிவு ஏற்படும் என்ற ரெட் அலர்ட்டால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (10,11-ம் தேதிகள்) விடுமுறை விடப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. பொதுத்தேர்வுகளும் நடைபெறாமல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை புதுவையில் பள்ளிகள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

