ரூ.500 லஞ்சம் பெற்ற வழக்கில் உதகை வருவாய் ஆய்வாளருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து உதகை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர் தாண்டவ நடராஜன். கடந்த 2007-ம் ஆண்டு உதகையை சேர்ந்த ஜான்பாஸ்கோ என்பவர் வாரிசு சான்றிதழுக்காக உதகை வட்டாட்சியர் அலுவலத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை பெற்ற கிராம வருவாய் அலுவலர், வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பியுள்ளார். வருவாய் ஆய்வாளராக இருந்த தாண்டவ நடராஜன், ஜான்பாஸ்கோவிடம் சான்றிதழ் அளிக்க ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால், ஜான்பாஸ்கோ ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்