
புதுச்சேரியில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக கோயில் கணக்குகளை அரசு தணிக்கை செய்யாத அவலம் நீடிக்கிறது. கோயில் தணிக்கைப்பிரிவில் கண்காணிப்பாளர் உட்பட 5 பதவிகள் காலியாக உள்ள சூழலில் ஒரேயொரு உதவியாளருடன் மட்டுமே இயங்குகிறது. இதனால் கோமா நிலையில் இந்து அறநிலையத்துறை இருப்பதாக ஆளுநர், முதல்வரிடம் ஆர்டிஐ தகவலுடன் புகார் தரப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 243 கோயில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், வீடுகள், கடைகள், காலிமனைகள் என உள்ளன. இவற்றின் மூலம் வரும் வருமானங்கள் மற்றும் கோயில் உண்டியல்கள் மூலம் வரும் வருமானங்கள் ஆகியவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்ய கணக்கு மற்றும் கருவூலத்துறையில் கோயில் தணிக்கை பிரிவு செயல்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

