
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகளைப் பார்வையிடுவதில் இரு அமைச்சர்களுக்கு இடையே நிலவும் கோஷ்டி பூசலால் மாவட்ட ஆட்சியரின் செயல்பாடு திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பி, வடிகால்கள் தூர் வாராததால் மழை நீர் குடியிருப்புப் பகுதிகளையும், விளைநிலப் பகுதிகளிலும் தஞ்சம் அடைந்துள்ளது. இதனால் பலர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மழை வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கள்ளக்குறிச்சி ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, வெள்ள நீர் வெளியேற்றப் பொதுப்பணித் துறையினருக்கும், ஊரக வளர்ச்சித் துறையினருக்கும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

