கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை, செங்கல்பட்டு, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு இன்று அதிகனமழை என்று கூறி வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்