
சென்னையில் நேற்று இரவு முதல் விடாமல் செய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதகிளில் வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை பெய்து வந்தது. ஆனால், நேற்று இரவு பெய்யத் தொடங்கியபின் விடிய, விடிய பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் விடாது மழை பெய்தது. கடந்த 5 ஆண்டுகளுக்குப்பின் இதுபோன்ற மழையைப் பார்த்திராத மக்கள் மகிழ்ச்சியும் அதேசமயம் அச்சமும் அடைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

