
தமிழகத்தில் இன்று 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில்,” தெற்கு வங்க கடற்பகுதியில்‌ (4.5 கிலோ மீட்டர்‌ உயரம்‌ வரை) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில்‌ காற்றழுத்த தாழ்வுப்‌ பகுதியாக மாறக்கூடும்‌. இது மேலும்‌ மேற்கு வடமேற்கு திசையில்‌ வரும்‌ நாட்களில்‌ தமிழக கரையை நோக்கு நகரக்‌ கூடும்‌.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

